சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஸ்டாலின் விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முயல்கிறார்: ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஸ்டாலின் விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முயல்கிறார்: ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

மதுரை, ஆக.8–


சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது;


தமிழகத்தில் என்ன நடைபெறுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிகிறதா? தெரியவில்லையா? என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது. கோவையில் காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மற்றொரு


புறம் காவல்துறை உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட் டுள்ளார் இன்றைக்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறைக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.


இது சாதாரண விஷயமாக இல்லை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எங்கே இருக்கிறது என்று பூதக்கண்ணாடிகளை வைத்து தேடக்கூடிய நிலையில் தான் இன்றைய நிலை உள்ளது. ஒரு நாட்டின் அமைதி தான் அடித்தளமாக இருக்க வேண்டும், அதனால் தான் அம்மா அவர்கள் அமைதி, வளம், வளர்ச்சி என்றும், அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது சட்ட ஒழுங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி திட்டங்களை செயல்படுத்தினார்.


எடப்பாடியார் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு குறித்து புள்ளி விவர ஆதாரத்துடன் 2.52 மணி நேரம் காவல்துறை மானியகோரிக்கையில் எடுத்து வைத்தார், ஆனால் ஸ்டாலின் இதுகுறித்து எந்த அக்கறை செலுத்தாமல் நாட்டில் எதுவும் நடைபெறவில்லை என மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அதற்கான விளம்பரத்தை செய்தார்.


ஆனால் பிரச்சனைக்கு கவனம் செலுத்தவில்லை, கடந்த நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.


பிரச்சனைக்கு தீர்வு காணுவது முக்கியமா? பிரச்சனையை திசை திருப்புவது முக்கியமா? பிரச்சனைகளை விளம்பர வெளிச்சத்தில் தான் மறைப்பது முக்கியமா? என்று தான் இருந்தார்கள். வானத்தை போர்வையால் போட்டு மூடி மறைக்க முடியாது அதேபோல உண்மையையும், சத்தியத்தையும் மறைக்க முடியாது.தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கிறது, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து அமைதியே கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் அமைதி,வளம்,வளர்ச்சி இன்றைக்கு கேள்விக்குறியாக இருப்பதை எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் திமுக ஆட்சியின் உண்மை சுயத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார். எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகிறார்கள். இன்றைக்கு 25 வார திண்ணைபிரச்சாரம் வெள்ளி விழா கண்டு, தற்போது 26வது வாரமாக தொடங்குகிறது.


82 மாவட்ட திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் கழக அம்மா பேரவை தொண்டர்கள் இதை எல்லாம் கூற வேண்டும். முதல் கட்ட எழுச்சி பயணத்தைக் காட்டிலும்,இரண்டாவது எழுச்சி பயணம் வென்று காட்டி உள்ளது தமிழகம் கருணாநிதி குடும்ப சொத்து அல்ல,மக்களின் சொத்து ஆகவே தமிழகத்தை மீட்டெடுக்க ஜனநாயகத்தை மீட்டெடுக்க எடப்பாடியாரின் கருத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.



நீட் தேர்வில் வெற்றி பெற்ற செந்துறை அரசுபள்ளி மாணவணுக்கு பாராட்டு


நத்தம், ஆக, 8


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-திருநூத்துபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி தையல் தொழிலாளி. இவரது மனைவி வாசுகி . இவர்களது மகன் நிதிஷ்குமார். இவர் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் நிதிஷ்குமார் தமிழக அரசு அறிவித்த 7.5 இட ஒதுக்கீட்டில் 430 மதிப்பெண் பெற்று தேர்ச்சி யடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதற்காக செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை சார்பில் மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.இதற்கு பள்ளி தலைமை யாசிரியர் தேவமனோகரி தலைமை தாங்கினார். உதவி தலைமையா சிரியர்கள் ராஜாக்கிளி, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் நாகேந்திரன் கலந்து கொண்டு மாணவன் நிதிஷ்குமாரை பாராட்டி கேடயமும், பரிசுகளும் வழங்கினார். தொடர்ந்து நாகசிவா சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் நாகராஜ்பிள்ளை,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்து உள்ளிட்டோரும் மாணவ னுக்கு வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%