
சங்கரன் கோவில், ஆக.19-
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றார்.
சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி இருந்து வந்தார்.அவர் மீது, அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானம் வெற்றி பெற்றதால் உமா மகேஸ்வரி பதவி இழந்தார்.
இந்நிலையில், நகராட்சி தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதிமுக சார்பில் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர். முன்னாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக உறுப்பினர் ஒருவர் கூட்டத்துக்கு வரவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர். நகராட்சி ஆணையர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் நடந்த தேர்தலில், கவுசல்யா (திமுக) 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார். அதிமுக ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி தலைவர் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்டதும், அதே அதிமுக ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றிருப்பதும் சங்கரன்கோவில் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெற்ற கவுசல்யாவுக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?