
பொள்ளாச்சி, செப். 12-
பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆ.சங்கம்பாளையம் கிராமத்தில் நேற்று அருள்மிகு சக்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் முருகபெருமான் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் அந்தப் பகுதி இஸ்லாமியர்கள் முத்தவல்லி எம்.அபிபுல்லா தலைமையில், துணைத்தலைவர் பாரூக், பொருளாளர் ஜஹூருத்தின், இமாம் சையது சுல்தான் உலவி, மற்றும் நவாப், நூர்பாய் உள்ளிட்டோர். சக்தி மாரியம்மனுக்கு, சீர்வரிசையாக பட்டுசேலை, மாலை, தேங்காய், பழம் ஆகியவற்றை தட்டில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவர்களுக்கு கோவில் விழா குழு சார்பில், லோகநாதன், கணேசன் ஆகியோர் தண்ணீர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இஸ்லாமியர்கள் அளித்த பட்டுச்சேலை அம்மனுக்கு சாத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?