கோவை ‘கொடிசியா’வில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாடு: பிரதமர் மோடி 19-ந்தேதி சிறப்புரை

கோவை ‘கொடிசியா’வில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாடு: பிரதமர் மோடி 19-ந்தேதி சிறப்புரை


கோவை கொடிசியாவில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி வருகிறார்.


கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:- தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியாவில் வருகிற 19-ந்தேதி இயற்கை விவசாயம் குறித்த மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாடு 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் இந்த மாநாடு நடக்கிறது.


இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் தனி அரங்கில் கலந்துரையாடுகிறார்.


இந்த மாநாட்டில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.


தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றால் மண் மலட்டு தன்மை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமரிடம் வழங்கப்படும்.


தமிழகத்தில் தற்போது 10 சதவீதம் அளவிற்கு தான் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. இதுதவிர இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட பல விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்காததால் மீண்டும் ரசாயன பயன்பாட்டிற்கு திரும்பும் நிலை உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%