குழந்தைகள் தின விழாவில் நூல்கள் வெளியீடு

குழந்தைகள் தின விழாவில் நூல்கள் வெளியீடு


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகளே நடத்திய குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது. குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, இயக்குனர் சுதர்சன் ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 புதுக்கோட்டை எழுத்தாளர் மு முருகேஷ் எழுதிய எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள் மற்றும் படித்து பழகு-2 ஆகிய இரண்டு சிறுவர் கதை நூல்கள் வெளியிடப்பட்டன. எட்டுக்கால் பூச்சி வேடமணிந்த இரண்டாம் வகுப்பு தன்விகா வழங்கிட ”எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்” சிறுவர் கதை நூலை மாணவி நெகாசினி வெளியிட வாசிப்போர் மன்ற செயலாளர் த.மதுஸ்ரீ முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ”படித்துப் பழகு-2 நூலை ஜெ. அதியன் வெளியிட கவினேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். மாணவி அகல்யா,அதியன், தாரிகா ஆகியோர் கதைகள் பற்றிய கருத்துரைகள் வழங்கினர். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் இளையராஜா கண்ணன், மாணவர்ளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.அட்சயாஸ்ரீ தலைமையேற்றார். முன்னதாக மாணவி தாரிகா வரவேற்றார். முடிவில் அஸ்மிட்டா ரிபானா நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%