குருவி ரொட்டி.. குச்சி ரொட்டி.. வாங்குவோம்!
குதுகலமாய் பள்ளிக்கூடம் ஓடுவோம்!
அம்மா தரும் ஐந்து காசுப் போதுமே... ஆளுக்கொரு பொம்மை ரொட்டி வாங்கலாம்!
முத்து பைய்யன் யானை ரொட்டி வாங்குவான்!
சுந்தரமோ குதிரைரொட்டிக்கு ஏங்குவான்!
சுப்பிரமணி காரு ரொட்டி ஓட்டுவான்! மீனு மானை ரொட்டி வடிவில் காணுவான்!
தகரக் கொட்டகை நாடார்கடை திறந்ததும்.. தாவிக்குதித்து ரொட்டி வாங்க ஓடினோம்!
சிகரம் ஏறி நின்றபடி பாடுவோம்! சின்ன வயசு பொம்மை ரொட்டிக்கு ஏங்கினோம்!
இந்தா என்று தோழருக்கு வழங்குவோம்.. இல்லை சாதி மதங்கள் ஒன்று கூடுவோம்.! இளைய பருவம் மீண்டும்வரக் கூடுமோ? இன்று கூடி ஒற்றுமையாய் வாழுவோம்!
அஞ்சுகாசு பத்துக்காசு போதுமே.. அழகழகா பொம்மை ரொட்டி வாங்கினோம்..! அயல்நாட்டு வணிகம் வளர்ந்த நாளிலே.. அந்தக்கால குருவி ரொட்டியைத் தேடுவோம்!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?