கீழ்அரசம்பட்டில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட முகாம்!
Aug 23 2025
11

வேலூர், ஆக. 24-
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மற்றும் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டம்
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து, முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, தெற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் பி.அருள்நாதன்,
மருத்துவ அலுவலர் பரணிதரன், கழக நிர்வாகிகள், துணை செயலாளர் குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
வெங்கடேசன், இளைஞர் அணி ஜெய் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?