காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்
Oct 06 2025
36
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19, 20, 21-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு, கடந்த 19-ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கனமழை அறிவிப்பு காரணமாக செப். 20, 21-ம் தேதிகளில் நடைபெறவிருந்த பிரச்சாரப் பயணம் அக்.4, 5-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், அக். 5, 6-ம் தேதிகளுக்கு மீண்டும் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவித்தது.
அதன்படி இன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், நாளை நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், பிரச்சாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 இடங்களும் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடங்கள் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி பிரச்சாரத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், பிரச்சார தேதி 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 8-ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், 9-ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூரிலும் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?