காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கலாமா? - நீதிமன்றம் காட்டம்

காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கலாமா? - நீதிமன்றம் காட்டம்



புதுடெல்லி, 

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம். என்று டெல்லி ஐகோர்ட்டு கூறியது.

 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசு, காற்று சுத்திகரிப்பான்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை. டெல்லி நகரில் காற்று சுத்திகரிப்பான்களை ஆடம்பரப் பொருட்களாகக் கருத முடியாது. சுத்தமான காற்று அவசியம், மத்திய அரசால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது வேதனை.


நச்சுக் காற்றில் இருந்து அடிப்படைப் பாதுகாப்புகூட இல்லாமல் குடிமக்கள் தவிக்கவிடப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே, இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல. காற்று மாசுவை தடுக்க நீண்ட காலத் தீர்வுகள் குறித்து மத்திய அரசு விரிவான திட்டங்களை உருவாக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், அதனைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தில் விரைவில் ஜிஎஸ்டி கவுன்சிலைக் கூட்டி முடிவெடுக்க அறிவுறுத்தியதுடன் மத்திய அரசிடம் மனு விவகாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%