கல்லூரி விழாவில் மருத்துவருக்கு 'அருள்மொழித் தாரகை' விருது
Aug 25 2025
13

வந்தவாசி, ஆக 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக, புதுச்சேரி மருத்துவர் வ.சங்கரதேவி முதலாண்டு வகுப்புகளை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, 'அறம் செய விரும்பு' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் அறம் வழி நடப்பதே வாழ்க்கையின் சிறப்பு என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினார். மேலும் சிறப்பு அழைப்பாளருக்கு 'அருள்மொழித் தாரகை' விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கல்லூரி இயக்குநர் எஸ்.அப்பாண்டைராஜன் வாழ்த்துரை வழங்கினார். டிடிகே. ராதா, சிவசங்கரன், பா.சுரேஷ் உள்ளிட்ட இயக்குனர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இறுதியில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. ஏழுமலை நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?