கன்னடம் தெரியுமா?’ - என்ற சித்தராமையா கேள்விக்கு முர்மு பதில்

கன்னடம் தெரியுமா?’ - என்ற  சித்தராமையா கேள்விக்கு முர்மு பதில்

பெங்​களூரு:

கர்​நாட​கா​வில் உள்ள மைசூரு​வில் அகில இந்​திய பேச்சு மற்​றும் செவித்​திறன் நிறு​வனத்​தின் வைர விழா நேற்று நடைபெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், முதல்​வர் சித்​த​ராமை​யா, மத்திய சுகா​தார இணை அமைச்​சர் அனுபிரியா படேல், கர்​நாடக சுகா​தார அமைச்​சர் தினேஷ் குண்டு ராவ், பாஜக எம்​.பி. யது​வீர் வாடியார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.


விழா​வில் முதல்​வர் சித்​த​ராமையா கன்​னடத்​தில் உரை​யாற்​றி​னார். அவர் தனது உரையை தொடங்​கியதும், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை பார்த்து சிரித்​த​வாறு, “உங்​களுக்கு கன்​னடம் தெரி​யு​மா?” என வின​வி​னார். அதற்கு அவர், த‌னக்கு கன்​னடம் தெரி​யாது என்​பதை போல தலை​யசைத்​தார். இதனால் அரங்​கில் சிரிப்​பொலி எழுந்​தது.


பிறகு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பேசுகை​யில், “முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு ஒன்றை கூறிக்​கொள்ள விழைகிறேன். கன்​னடம் எனது தாய்​மொழி இல்​லை​யென்​றாலும், இந்​நாட்​டிலுள்ள அனைத்து மொழிகள், கலாச்​சா​ரங்​கள் மற்​றும் மரபு​களை நான் மிக​வும் மதிக்​கிறேன். ஒவ்​வொரு மொழி​யினர் மீதும் நான் மிகுந்த மதிப்​பும் ம‌ரி​யாதை​யும் கொண்​டுள்​ளேன்.


அனை​வரும் தங்​களின் தாய்​மொழியை உயிர்ப்​புடன் வைத்​திருக்க வேண்​டும். தங்​கள் கலாச்​சா​ரம், மரபு​களை பாது​காத்து முன்​னேற வேண்​டும். அந்த நோக்​கத்தை அடைய முயற்​சிக்​கும் அனை​வருக்​கும் எனது வாழ்த்​துகள். கன்​னடத்தை கொஞ்​சம் கொஞ்​ச​மாக கற்க முயற்​சிக்​கிறேன்” என புன்​னகை​யுடன் பதிலளித்​தார். இந்​நிலை​யில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் கேள்​வி​யும் அதற்கு குடியரசுத் தலை​வர் பதிலளித்த வித​மும் தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வைரலாகி​யுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%