கணபதிபுரம் ஸ்ரீ நாகதேவி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி மகா வேள்வி பூஜை
Nov 05 2025
92
நாகப்பட்டினம் , நவ , 06 -
நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நாகதேவி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி மகா வேள்வி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மடம் ஓம் ஸ்ரீ வீரப்பிள்ளை தம்புரான் சுவாமிகள் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இதனை அடுத்து நடைபெற்ற அன்னதானத்தை ஸ்ரீ மகா தேவதை அம்மன் ஆலய தம்ரான் ஸ்ரீ ஸ்ரீ நாகபாலன் சுவாமிகள் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
குத்தாலம் மோகன் நினைவு அறக்கட்டளை சார்பாக மலர்கொடி, மோனிஷ், அஸ்வந்த் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோட்டுச்சேரி ஹேமலதா, திருப்பனந்தாள் தவசெல்வி , மயிலாடுதுறை வழக்கறிஞர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அருள்மிகு மகா சக்தி நாக தேவதை சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?