
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னப்பாலத்தில் மேனாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார்.
பள்ளி ஆசிரியை ஞானசெளந்தரி வரவேற்றுப் பேசினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிறப்பு மற்றும் ஆசிரியர் தின முக்கியத்துவம் பற்றி ஆசிரியர் ஜெ.ஜே.லியோன் விளக்கிப் பேசினார்.
தலைமையாசிரியரால் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அனைவருக்கும் இனிப்பு பாயாசம் வழங்கப்பட்டது.
நிறைவாக, ஆசிரியை மிக்கேல் ராணி நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நிஷா, சந்திரமதி, லாரன்ஸ் எமல்டா, நிவேதா, நான்சி, பிரிஸ்கிலா போன்றோர் செய்து இருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?