ஒரு மணி நேரத்தில் திருப்பி தருவதாக கூறி வியாபாரிகளிடம் நகைகளை பெற்று நூதன மோசடி
Aug 06 2025
11

சென்னை:
சென்னை, என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் தில்குஷ் ஜெயின் (50). கடந்த பிப்.3-ம் தேதி அதே பகுதியில் நகைக்கடை நடத்திவரும் வில்லிவாக்கத்தில் வசிக்கும் சகோதரர்கள் முகேஷ் ரங்கா (42), மணிஷ் ரங்கா (33) ஆகியோர் இவரிடம் 603 கிராம் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு, ஒரு மணி நேரத்தில் திருப்பித் தந்து விடுகிறோம் எனக்கூறி சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை. நகைகளுடன் தலைமறைவாகினர்.
அதிர்ச்சி அடைந்த தில்குஷ் ஜெயின் இது தொடர்பாக யானைக்கவுனி காவல் நிலயத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் சகோதரர்களான முகேஷ் ரங்கா மற்றும் மணிஷ் ரங்கா ஆகியோர் தில்குஷ் ஜெயினிடம் பெற்றதைப்போல், மேலும் 5 நகை வியாபாரிகளிடம் நகையைப் பெற்று திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 123 கிராம் தங்க நகைகள், 87 கிராம் வெள்ளி, பணம் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?