
புதுதில்லி
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந் தம் ஏற்படுத்துவது குறித்து விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு க்கு வர வேண்டுமென இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் உடன் ஜெய்சங்கர் தில்லியில் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அவருடன் இணைந்து செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது ஜெய்சங்கர் பேசிய தாவது: காலநிலை மாற்றம், பாது காப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் உடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்தியா உடனான வர்த்த கத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது. மேலும் இந்தியாவின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும் முயற்சி எடுக்கப்படு கிறது. இதனை நாங்கள் பாராட்டு கிறோம். மேலும் இந்தியா-ஜெர் மனி செமிகண்டக்டர் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் துறையிலும் ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பாக பரிசீலித்து வரு கின்றோம் என்றார். உலக பொருளாதாரத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்தியா, ஜெர் மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து செயல்படு வதற்கான தேவையை அதிகரிக் கின்றது. இந்தியா - ஜெர்மனி இடை யேயான உறவு மிகவும் ஆழமா னது. மேலும் இந்த உறவு விரை வான வளர்ச்சி பெற கணிசமான சாத்தியக்கூறுகள் உள்ள உறவு என்றும் கூறினார். மேலும் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவ தற்கு ஜெர்மனி முழு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று ஜெர்மன் அமைச்சர் ஜோஹன் வதேபுல் உறுதியளித்துள்ளதாகவும் தெரி வித்துள்ளார். குறிப்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் தொ டங்கப்பட வேண்டும் என்று ஜோஹன் வதேபுல் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?