எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி:

மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக போராட்​டம் நடத்​திய தேர்​வர்​கள் மற்றும் ஆசிரியர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது வெட்​கக்​கே​டானது மட்​டுமல்ல, அது ஒரு கோழைத்​தன​மான அரசாங்​கத்​தின் அடை​யாளம்.


வாக்​கு​களைப் பெறு​வதற்​காக அரசாங்​கம் முதலில் தேர்​தல்​களில் மோசடிகளைச் செய்​தது, பின்​னர் தேர்​வு​களில் முறை​கேடு​களை அனு​ம​தித்​தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்​கு​வ​தில் தோல்​வியடைந்​தது, இறு​தி​யில் குடிமக்​களின் உரிமை​கள் மற்​றும் குரல்​களை நசுக்​கும் நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ளது.


இளைஞர்​கள், விவ​சா​யிகள், ஏழைகள், தலித்​துகள் மற்​றும் சிறு​பான்​மை​யினரின் கோரிக்​கைகளுக்கு அரசாங்​கம் முன்​னுரிமை அளிக்​க​வில்​லை. ஏனெனில் அது அவர்​களின் வாக்​கு​களைச் சார்ந்​தது அல்ல. மக்​கள் பயப்​ப​டா​மல் உறு​தி​யாக நின்று போராட வேண்​டும். இவ்​வாறு ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்.


இதேபோன்​று, காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​, ‘‘இந்​திய இளைஞர்​களின் எதிர்​காலத்​தைத் திருடு​வது மோடி அரசின் பழக்​க​மாகி​விட்​டது. டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் எஸ்​எஸ்சி தேர்​வு மோசடிக்கு எதி​ராகப் போராடிய மாணவர்​கள் மீது மோடி அரசின் கைப்​பாவை காவல்​துறை நடத்​திய கொடூர​மான தடியடி மிக​வும் கண்​டிக்​கத்​தக்​கது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%