எய்ம்ஸ்’ கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Aug 10 2025
21

மதுரை,ஆக.8–
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தாக்கலான வழக்கில், 2026 ஜனவரியில் முதற்கட்ட திட்டப் பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி முடிந்துள்ளது என மத்திய அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு, 2018 ஜூன், 20ல் ஒப்புதல் அளித்தது. கட்டு மானத்திற்கு நிதி ஒதுக்கி டெண்டர் அறிவிப்பு வெளியிட, 2018ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2018 டிசம்பர், 6ல் விசாரணையின்போது மத்திய அரசு, 'கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி, 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்' என வழக்கு முடிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியை விரைவுபடுத்த உத்தரவிட மற்றொரு வழக்கு தாக்கல் செய்தேன். 2021 ஆகஸ்ட், 17ல் நீதிபதிகள் அமர்வு, '36 மாதங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது' என உத்தர விட்டது. இதை நிறைவேற்றாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தேன். 2023ல் விசாரணையின்போது, 'திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி, 1977.8 கோடி ரூபாயில் தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும். இது, 5 ஆண்டுகள், 8 மாதங்களில் நிறைவேற்றப்படும் என, மத்திய அரசு தரப்பு தெரிவித்தது.
தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியை குறித்த காலவரம்பிற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.
மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், முதற்கட்ட திட்டப்பணி, 2026 ஜனவரியில் நிறைவடை யும். பின், பயன்பாட்டிற்காக எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கட்டுமான பணியில், தற்போது, 50 சதவீதம் நிறை வடைந்துள்ளது என்றார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?