ஹைக்கூ கவிதை
எனது பயணத்தின் பொழுது
இயற்கையின் ஊதக்காற்றும் என்னுடன் சேர்ந்து பயணித்தது நான் சுவாசிக்க சிரமப்படுவேன் என்று. ....
நிலவு
வானச் சிறையிலிருந்து
விடுபட்டு
வண்ண முகிலுடன் வாதாட வந்தாயோ! !!!
பௌர்ணமி
இரவும் பகலாகி போன தேன்? பௌர்ணமி தான். .
வேகம்
தேடலை நோக்கி போகும் பொழுது பயணத்தின் வேகம் அதிகமாக இருக்கும்....
கானல் நீர்
கனவுகள் கானல் நீராய் மாறியது...
காடுகணத்து கானல் நீரும் காணாமல் போனது.......
நிலவு
இருளில் மிதக்கும் நிலவு பகலை எட்டிப்பார்த்தது உலகைச் சுற்றிப்பார்ப்பதற்காக
அன்னை
கருவறையை கல்லறையாக மாற்ற நினைக்காதவள் தான் அன்னை....
பேனா முள்
பேனாவின் முள் குத்துகின்றதென்று
பேப்பர் சிணுங்கினால் அர்த்தமுள்ள காவியம் எதுவும் பிறக்காது..
பனித்துளி
பனித்துளியே!புற்களின் தாகம் தணிக்க நடுநிசியில்
வந்ததேன்?
பகலில் பனிமலையை பாதுகாக்கச் சென்றாயோ!!
இரவு
விடியாத இரவைத் தா விழியோடு உறவாட..
அனாதை
விசும்பும் கண்ணீரை வீசும் காற்று ஆறத்தழுவியது..
முத்தம்
என் நுதலுக்காக கொடுக்கும் நூறு நிலாக்களை விட உன் குவிந்த இதழின் முத்தம் ஒன்றே போதுமானது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?