உலக வுஷு சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனைகள் அசத்தல்
Sep 08 2025
15

புதுடெல்லி:
17வது உலக வுஷு சாம்பியன்ஷிப் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அதேவேளையில் ஆடவர் பிரிவில் 2 பேர் நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ளனர்.
மகளிருக்கான 52 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அபர்ணா, இந்தோனேஷியாவின் தாரிசா டீ ஃப்ளோரியன்டினாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அபர்ணா, வியட்நாமின் நிகோ தி பூங்காவுடன் மோதுகிறார்.
60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் கரீனா கவுசிக், பிரேசிலின் நதாலியா பிரிக்வெசி சில்வாவை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் கரீனா கவுசிக் சீனாவின் ஜியாவோ வெய் வூ-வை எதிர்கொள்கிறார்.
75 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஷிவானி, ரஷ்யாவின் கேத்ரினா வல்சுக்கை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்தார். இறுதிப் போட்டியில் ஷிவானி, ஈரானின் ஷஹர்பானோ மன்சூரியன் செமிரோமியுடன் மோதுகிறார். ஆடவருக்கான 56 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சாகர் தஹியாவும், 75 கிலோ எடை பிரிவில் விக்ராந்த் பாலியனும் அரை இறுதிக்கு முன்னேறினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?