உலக யானைகள் தினம் அனுசரிப்பையொட்டி சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் உறுதி மொழி ஏற்பு
Aug 11 2025
11

சீர்காழி, ஆக, 12 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் யானைகள் திட்டப் பிரிவும் தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து உலக யானைகள் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு யானைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக முழுவதும் பள்ளிக் கல்வித் துறையால் உறுதி மொழியை எடுத்துக் கொள்ள செய்கின்ற நிகழ்வு நடைபெற்றது. சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன் தலைமையில் பள்ளி மூத்த ஆசிரியர்கள் ஜி
. சுந்தர்ராஜன் ,பி.விஜய் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ். சக்திவேல், ஆர்.கபிலன் ஆகியோர் கலந்து கலந்து கொண்டார்கள். நிறைவாக பள்ளியின் விலங்கியல் முதுகலை ஆசிரியர் கே . லோகநாதன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?