உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி வழிபாடு:
Nov 16 2025
15
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் -வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள கூழமந்தல் கிராமத்தை அடுத்து உள்ளது உக்கல்.இங்கு பிரசித்தி பெற்ற மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது.
இக்கோயிலில் ஹோம குண்ட பூஜை ,மூன்றாம் பிறை சந்திர தரிசனம் நிகழ்வு ,மகா ஆரத்தி வழிபாடு ,நவராத்திரி பூஜை உற்சவம் ,சிறப்பு உற்சவர் பூஜைகள் ,உள்ளிட்டவைகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
ஆலய குரு சங்கர் குருஜி ஹோம குண்ட பூஜை ,யாகசாலை வழிபாடு, உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை முன் நின்று நடத்தி மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு தினமும் அபிஷேகம் ,ஆராதனை செய்து வருகின்றார்.
மடாவவளம்ஸ்ரீ காமாட்சி அம்பாள் வெள்ளி ஆடை பிரத்யோக அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?