ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

புதுடெல்லி:

சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


இப்​போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபை​யில் சீர்​திருத்​தங்​கள் செய்​யப்பட வேண்​டும். குறிப்​பாக ஐ.நா.​வின் ஆட்சி மன்ற அமைப்​பு​களில் வளரும் நாடு​களுக்கு போதிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்பட வேண்​டும். ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம் என்ற கொள்​கையை எஸ்​சிஓ அமைப்பு பின்​பற்​றுகிறது. உலகத்​தின் நன்​மைக்​காக எஸ்​சிஓ பாடு​படும். தீவிர​வாதம், பிரி​வினை​வாதம், போதைப் பொருள் கடத்​தல், ஆயுத கடத்​தல் உள்​ளிட்ட குற்​றங்​களுக்கு எதி​ராக உறுப்பு நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்​படும்.


கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி இந்​தி​யா​வின் பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலை எஸ்​சிஓ வன்​மை​யாக கண்​டிக்​கிறது. இந்த தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரிவிக்​கிறோம். தாக்​குதலுக்கு காரண​மானவர்​களை நீதி​யின் முன்பு நிறுத்த வேண்​டும். பாலஸ்​தீனத்​தின் காசா பகுதி போரி​னால் மிகக் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். அங்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்பட வேண்​டும். அப்​பகுதி மக்​களுக்கு தேவை​யான மனி​தாபி​மான உதவி​களை வழங்க வேண்​டும்.


கடந்த ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் தாக்​குதல் நடத்​தின. குறிப்​பாக ஈரான் அணு சக்தி தளங்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. ஏராள​மான ஈரான் மக்​கள் உயி​ரிழந்​தனர். இஸ்​ரேல், அமெரிக்​கா​வின் தாக்​குதல் சர்​வ​தேச சட்ட விதி​கள், ஐ.நா. சபை விதி​களுக்கு எதி​ரானது. இந்த தாக்​குதலால் உலக அமை​திக்​கும் அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது. ஈரான் மீதான தாக்​குதலை எஸ்​சிஓ மிக வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது.


எஸ்​சிஓ உறுப்பு நாடு​கள் இடையே வர்த்தக போக்​கு​வரத்தை மேம்​படுத்த வடக்​கு- தெற்​கு, கிழக்​கு-மேற்கு வழித்​தடங்​கள் உரு​வாக்​கப்​படும். சீனா- கிர்​கிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தானை இணைக்​கும் வகை​யில் புதிய ரயில் பாதை அமைக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்டு உள்​ளது.


எஸ்​சிஓ மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி உரை​யாற்​றிய​போது, சீனா​வின் பெல்ட் அண்ட் ரோடு திட்​டத்தை மறை​முக​மாக விமர்​சித்​தார். அவர் பேசி​ய​போது, “பு​திய வர்த்தக வழித்​தடங்​களை உரு​வாக்​கும்​போது எந்​தவொரு நாட்​டின் இறை​யாண்​மைக்​கும்​ பா​திப்​பு ஏற்​படுத்​தும்​ வகை​யில்​ செயல்​படக்​கூ​டாது” என்​று கண்டிப்புடன் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%