இஸ்ரேல் இனப்படுகொலையின் தாக்கம் : 10 லட்சத்துக்கும் அதிகமான வாழ்க்கை ஆண்டுகளை இழந்த பாலஸ்தீனக் குழந்தைகள்
இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையின் விளைவாக காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் லட்சக்கணக்கான வாழ்க்கை ஆண்டுகளை இழந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. பொருளாதார நிபுணர் சம்மி சஹ்ரான், அறுவை சிகிச்சை நிபுணர் கஸ்ஸான் அபு- சித்தா ஆகியோரின் ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அவர்களின் அறிக்கையில் காசாவில் உள்ள பாலஸ் தீனர்கள் 30 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு களை இழந்துள்ளதாகவும், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 லட்சத்துக்கும் அதிகமான வாழ்க்கை ஆண்டுகளை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தொடரும் சுகாதார நெருக்கடி போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அம லில் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும் இஸ்ரேல் ராணுவம் அதனை தொடர்ந்து மீறி வரு கிறது. குறிப்பாக பாலஸ்தீனர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை காசாவுக்குள் செல்ல அனுமதி மறுத்து வருகிறது. இதனால் அங்கு சுகாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு நிவாரணப் பொருட்களை அனுமதிப்பதாக அறிவிப்புகள் வந்தபோதிலும் உண்மையில் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் காசாவிற்குள் தேவை யான அளவில் வரவில்லை என ‘எமர்ஜென்சி’ என்ற சர்வதேச அமைப்பு நவம்பர் 6 அன்று எச்சரித்திருந்தது. பல நோயாளிகளுக்கு தினமும் கட்டுப் போட வேண்டியுள்ளது, ஆனால் உதவிகள் மறுக்கப்படுவதால் எஞ்சியிருக்கும் ஒருசில துணி பேண்டேஜ்களைக்கூட சிறியதாக வெட்டிப் பயன்படுத்தும் நிலை உள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீனர்களுக்கு தேவையான உதவி களைச் செய்ய ஒன்பது உதவி அமைப்புகள் விடுத்த 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை இஸ்ரேல் அதிகாரிகள் நிராகரித்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் பாலஸ்தீனர்களுக்கு போர்வைகள், கூடாரங்க ளை அவசரமாக வழங்க வேண்டிய தேவை உள்ளது. இது சுகாதார நிலைமைகள் மேலும் மோசமடையாமல் தடுக்க உதவும் என ஐ.நா அவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இதனையும் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?