இந்த வேலைகளை ஏஐ-யால் செய்யவே முடியாது - மைக்ரோசாப்ட் வெளியிட்ட பட்டியல்
Aug 14 2025
12

ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் ஏஐ புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியை செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவை பல முன்னணி நிறுவனங்களும் பயன்படுத்த தொடங்கியிருப்பதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன. இதனால், வரும் ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்குமோ என அச்சம் ஐடி துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் ஏஐ புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். அதேவேளையில் ஏஐ பயன்பாடு காரணமாக வேலையின் திறன் கூடும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் செய்யும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இதற்கிடையே ஏஐ வருகையால் எந்த துறைகளில் எல்லாம் வேலை இழப்பு ஏற்படும் எவை எல்லாம் பாதிக்கப்படாது? என்ற ஆய்வறிக்கையை மைக்ரோசாப்ட் நடத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நடத்திய ஆய்வில், செவிலியர், மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர்கள், டயர் பழுதுபார்ப்பவர்கள் , உள்ளிட்ட பணிகளை ஏஐ செய்ய முடியாது எனத்தெரிவித்துள்ளது.
சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் அதை எக்காரணத்தை கொண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?