இந்தியா மீது 50 சதவீத வரி: டிரம்புக்கு மேலும் ஒரு அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு
Aug 11 2025
11

புதுடெல்லி, ஆக.10–
இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்த டிரம்புக்கு மேலும் ஒரு அமெரிக்காவின் மூத்த பொருளாதார நிபுணர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்காவின் மூத்த பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஜான் போல்டன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரபல பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் கூறியதாவது:-
அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிரான குழுவில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா நீண்டகால பாதுகாப்பை அறுவடை செய்ய முடியாது. இந்தியா உலகில் ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பெரிய சக்தி.
டிரம்ப் வரிகளில் செய்யும் அனைத்தும், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?