பிரபல சர்வதேச பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான, ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 34ஆவது சீசன் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி வியாழனன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு 2 ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, சீன தைபேவின் வூ - ஷூ ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராங்கி - சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. பிரணோய் அவுட் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணோய், இந்தோனேசியா வீரர் பர்கனிடம் 19-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். இதே பிரிவில் ஆயுஷ் செட்டி, லக்சயா சென் ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.
மகளிர் பிரிவில் யாரும் பங்கேற்கவில்லை
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச அளவில் முக்கிய தொடராக இருந்த போதிலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணியில் பெண்கள் கலந்து கொண்டனர். ஆனால் தொடக்கம் முதலே அவர்கள் வெளியேறிவிட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?