ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல்
Aug 24 2025
11

புதுடெல்லி:
ஆன்லைன் மூலமாக பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் சமூகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால்தான் தடையால் ஏற்படும் வருவாய் இழப்பை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் இழப்பதாக அரசு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தப்பட்ட தீய விளைவுகள் குறித்து கவலை எழுப்பியுள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடும் பலர் தங்களது சேமிப்பை இழந்து கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாகும்போது, விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.1 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?