🙃🙃
அலைபேசியில் பேசும் வாய்...
அவன் கண்களும் கருத்தும்,
என்றும்
கணினியிலும்,
இன்னொரு அலைபேசியிலும்,
துணி துவைக்கும் எந்திரத்திலும்,
அடுப்பில் ஏற்றிய வாணலியில்
கொதிக்கும் குழம்பிலும்;
நானே பேசிக் கொண்டிருக்க;
ஒற்றை வார்த்தை
பதில்கள் உதிர
என் உதிரம் கொதிக்க;
கண்ணோடு கண் நோக்கி பேசாத
மகனிடம்,
நான் துரிதமாக
கையசைத்து விடை பெறும் நேரத்தில்;
என்னைவிட துரிதமாக அவன் அலைபேசியைத் துண்டிக்கும் தருணத்தில்;
கசிந்த கண்கள்
இப்போதெல்லாம்
கசியாமல் இருக்கப் பழகிக் கொண்டன.
சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%