அம்மா..டாடி !

அம்மா..டாடி !



" அம்மா..அம்மா !" அறைக்குள்ளி ருந்து விஷால் கத்த, அடுக்களை க்குள் வேலைபார்த்துக்கொண்டிருந்த சூடாமணி கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை சிம்மில் வைத்துவிட்டு வெளிப்பட்டாள்.


" எதுக்குடா இப்படி கூப்பாடு போடறே ?" அறைக்குள் நுழைந்து மகனிடம் கேட்டாள்


" பனியன சரியா போடமுடிய ல்லம்மா.!" 


" ஆமா...ஏழாம் வகுப்பு படிக்கறே. இன்னும் பனியன்கூட போடத் தெரியல்ல !" பின்பக்கம் சுருட்டியி ருந்த பனியனை மெல்லப் பிரித்து சரியாக்கிவிட்டாள்.


" இவ்வளவுதானா..வேற ஏதாவது பாக்கி இருக்கா ?" 


" அவ்வளவுதான். நீ போய் வேலையப்

பாரு !" புன்னகையுடன் விஷால் சொல்ல சூடாமணி அடுக்களைக்குள் மீண்டும் நுழைந்தாள். ஆனால் இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது.


" அம்மா..அம்மா !" மறுபடியும் விஷாலின் கூக்குரல் !


சாம்பார் நன்கு கொதித்திருந்தது. அடுப்பை அணைத்துவிட்டு மகனிடம் சென்றாள் சூடாமணி.


" என்ன ஆச்சு இன்னிக்கு ! அம்மா அம்

மான்னு ஏலம் போடறே !" 


" யூனிஃபார்ம் ஷர்ட்ட சரியா போட முடியல்ல !" 


சட்டையின் ஒருபக்கம் ஏறியிருந்தது. பட்டன்களை தாறுமாறாகப் போட்டி ருந்தான்விஷால்.


இதைப் பார்த்த சூடாவிற்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்தது. 


" அட ராமா ! ஷர்ட் பட்டனக்கூட சரியாப்போடத்தெரியல்ல !" என்றவள் பட்டன்களைக் கழற்றி ஒவ்வொ ன்றாகச் சரியாகப் போட்டாள்.


" விஷால் கண்ணா ! ரூம்லகண்ணாடி

பீரோ இருக்குல்ல. அதுல பார்த்து க்கிட்டே நல்லா டிரெஸ் பண்ணிக் கோ..ஓ.கே.வா?"


" ஓ.கே.ம்மா !" என்றான் விஷால்.


பிறகு மறுபடியும் கிச்சனில் நுழைந்த

சூடா மகனின் லஞ்சுக்கு வேண்டிய சாப்பாட்டை கேரியர் டப்பாவில் வைத்தாள்.


" அம்மா..அம்மா ! " 


ஹாலுக்குள் வந்த சூடா என்ன ஏது என கேட்கும் முன்னால் விஷால் தன் கால்களைக் காட்டியபடி அம்மாவிடம் கூறினான்" ஷூ காலுக்குள்ள சரியா நுழையமாட்டேங்கிறதம்மா !" 


சூடா மகன் காலடியில் உடகார்ந்தாள்.

கன்னாபின்னாவெனாறு அவன் போட்டிருந்த ஷூவையும் சாக்ஸை யும் கழற்றினாள். பிறகு சாக்ஸை நன்றாக நீவி விட்டு காலில் போட்டா ள். ஷூ இப்பொழுது வாகாக நுழைந்தது. லேஸைக் கொண்டு கட்டி முடிச்சுப் போட்டாள்.


" இப்ப சரியா ?" சூடா மகனிடம் கேட்க

முகம் மலர்ந்த விஷால் ," தேங்க்யு ம்மா" என்றான்.


லஞ்ச் பேக் கூடவே பாட்டிலிலும் குடிநீர் ஃபில் செய்து பையின் சைடு பக்கம் வைத்து மகனிடம் நீட்டினாள். முதுகில் பாடப்புத்தகம், நோட்டுகள் அடங்கிய பை கையில் லஞ்ச் பேக் இவைகளை எடுத்துக்கொண்டு ரெடியானான் விஷால்.


" அம்மா பை ! டாடி பை ! உள்ளே அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஈஸ்வரனின் காதில் விழுகிற மாதிரி கத்திக் கூறிவிட்டு புறப்பட்டான் விஷால்.


சைகிளில் ஏறி மகன் கண்ணிலி ருந்து மறையும் வரை இருந்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் சூடா.


" என்ன பயல் இன்னிக்கு மூச்சுக்கு முன்னூரு தடவ அம்மா அம்மான்னு உன்னை கூப்பிட்டான். " 


கிண்டலுடன் கேட்ட கணவரைப் பார்த்து லேசாகச் சிரித்தாள் சூடா.


" ஆமா...உன்னை அம்மான்னு வாய் நிறையக் கூப்பிடறான். என்னை மட்டும்' டாடி ' ன்னு கூப்பிடறான் !" 


" விடுங்க. அவன் இஷ்டப்படி எப்படி வேணும்ன்னாலும் கூப்பிடட்டும். பெரியவன் ஆனால் மாறிடுவான் !" 


" அது சரி. உன் வயிற்றில் பிறக்காதப்

போதே உன்னை இத்தனை தடவை

'அம்மா' ன்னு கூப்பிடறானே.உண்மை

யிலேயே நமக்குப் பிறந்திருந்தால் பயல் ஆயிரம் தடவையாவது அம்மா ன்னு கூப்பிட்டிருப்பான் !" 


" இருக்கலாம். அதனால உங்களு க்கும் பெருமைதானுங்களே ! " 


மனைவியின் பதில் ஏதோ ஒரு விஷ 

யம் பற்றி கோடிட்டு காட்ட

உள்ளுக்

குள் மறுகினார் ஈஸ்வரன். 



வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

                   

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%