அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்
Sep 11 2025
107
    
144ஆவது சீசன் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டி ஞாயிறன்று நிறைவுபெற்றது. இந்த தொடரின் கடைசி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிறன்று நள்ளிரவு நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள இத்தாலி யின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயி னின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தி னர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2 ஆவது முறையாக (முன்னர் 2022ஆம் ஆண்டு சாம்பியன்) சாம்பியன் பட்டம் வென் றார். அல்காரஸுக்கு இது 6ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். நடப்பு சாம்பியனான சின்னர் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறி னார். சின்னர் இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் ரூ.44 கோடியும், இரண்டாம் பிடித்த சின்னர் ரூ.22 கோடியும் பரிசுத்தொகையாக வென்றனர். அதே போல அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட்ஸ் சுற்றுகளில் வெளியேறியவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு பரிசுத்தொகை வழ ங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?