அன்பு காட்டுங்கள் அதுபோதும்..!
மாற்றுத்திறனாளி நண்பர்களை
கடவுளின் குழந்தை என்று சொல்லி
கடவுளைப் போல தனிமைப் படுத்தி
அறைக்குள்ளேயே அடைக்க வேண்டாம்.
உடலில் எந்தக் குறையிருந்தாலும்
இரக்கம்காட்டி அவர்களை நாம்
தனிமைப் படுத்திட வேண்டாம்
அன்பு காட்டுங்கள் அதுபோதும்.
பேருந்து ரயில் பயணத்தில்
இருக்கை கொடுத்த உதவ வேண்டாம்
அவர்களுக்கான இருக்கைகளில்
இருக்காமல் இருந்தால் அது போதும்.
மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு
பேருந்து கட்டணத்தில் சலுகையாம்
அந்தச் சீட்டைப் பெறுவதற்கு
பல நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை.
பெயரில் கூட ஊனம் வேண்டாமென
மாற்றுத்திறனாளி ஆக்கினார் கலைஞர்
அவர்களுக்கு வழங்கும் சலுகையைக் கூட
தட்டிப் பறிக்கின்றார் நல்லவர் பலர்.
அவர்களும் நம்மில் ஒருவரென்பதை
உள்ளத்தில் நிறுத்தி உதவிடுவோம்
நம்மோடு இணைந்து பயணிக்க
நம்மால் இன்றதைச் செய்திடுவோம்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*(டிசம்பர் 3 - உலக மாற்றுத்திறனாளிகள் தினம்)*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?