அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி


 

 திரிப்பொலி,


பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.


இந்நிலையில், வங்காளதேசம், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 90 பேர் லிபியாவில் இருந்து 2 படகுகளில் மத்திய தரைக்கடல் வழியாக நேற்று முன் தினம் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.


அகதிகள் பயணித்த படகுகளில் ஒன்று லிபியாவின் அல் கான்ஸ் நகர் அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து தொடர்பாக கடந்த சனிக்கிழமை லிபியா கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் கடலில் தத்தளித்த அகதிகளை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%