tamilnadu epaper

காவியம் நீ..!

காவியம் நீ..!


என் கனவெல்லாம் 

நீயே நிறைகிறாய்..


என் நினைவெல்லாம்

நீயே உறைகிறாய்..


காத்திருக்கும் கணமெல்லாம்

யுகமாய் வதைக்க..


உன்னை பார்த்திருக்கும் தினமெல்லாம்

இதமாய் சிதைக்க..


கோடி ஜென்மங்கள்

ஏதேனும் ஒன்றில்..


உன் மடிசேரும்

வரமொன்றே..


என் தவமடி..


நீண்டிருக்கும் பெருங்கணம்

மீள்வதில்லை நீள்கிறது..


கனத்திருக்கும் பிரிவிடைவெளி

சுகிப்பதில்லை தகிக்கிறது..


எத்தனை முறை பார்த்தாலும்

அத்தனை முறையும்

புதிதாய் பூக்கிறாய்..


எத்தனை முறை கேட்டாலும்

தேனாய் செவியை நனைக்கிறாய்..


ஆகச்சிறந்த ஓவியம் நீ

அன்பால் நிறைந்த

காவியம் நீ..!


-ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்