அமைதி நிலவ வேண்டும் -உலகில்
அன்பு நிலைக்க வேண்டும்.
இமைகள் மூட மறந்த -மக்கள்
இனிதே உறங்க வேண்டும்!
குண்டு சத்தம் நீங்கி -நாட்டில்
குருவி பறக்க வேண்டும்.
நண்டுபோல் குழிக்குள் -ஒளியும்
நடுக்கம் மறைய வேண்டும்!
புதினும் கெலக்சியும் கூடிப் --பேசிப்
போரை நிறுத்த வேண்டும்
சிதறி ஓடும் அகதி -மகிழ்வாய்
சேர்ந்து வாழவேண்டும்!!
-குடந்தை பரிபூரணன்